/ வாழ்க்கை வரலாறு / கிருபானந்த வாரியாரின் தமிழ் அமுதம்
கிருபானந்த வாரியாரின் தமிழ் அமுதம்
பக்கம்: 256 முருகன் அருள் பெற்ற முத்தமிழ் வித்தகர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், தமிழகத்தில் ஆன்மிகப் பயிர் வளர்த்த சான்றோர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். சிலர் அவரை, அறுபத்து நான்காவது நாயனார் என்றே போற்றி மகிழ்வர். அவர் வாழ்க்கை வரலாற்றின் சில பகுதிகளை இந்நூல் தெளிவாகக் கூறுகிறது.வாரியார் சுவாமிகள் மேடைப் பேச்சாளர் மட்டுமன்று; இசைப் புலமையும் பெற்றவர் என்பர். தமிழிசை மன்றத்தின் வெள்ளி விழாவும், "இசைப் பேரறிஞர் பட்டம் வழங்கி, கவுரவிக்கப்பட்ட தகவல் உள்ளது.படிக்கப் படிக்கச் சுவையாக உள்ள தகவல்கள் உண்டு.