/ வாழ்க்கை வரலாறு / கொங்கு நாட்டு பட்டக்காரர்களும் பாளையக்காரர்களும்

₹ 600

கொங்கு நாட்டில் வட்டாரத் தலைவர்களாக ஆட்சி புரிந்த, 40 குடும்ப ஆவணங்களின் தொகுப்பு நுால். ஆங்கிலேய தலைமை நில அளவை அதிகாரி மெக்கன்சியால் தொகுக்கப்பட்டுள்ள சுவடி தகவல்கள் அடங்கியுள்ளன.நாயக்கர், கவுண்டர், மன்றாடி, வாணவராயர் போன்ற பட்டங்கள் எப்படி ஏற்பட்டன என்பது குறித்து அலசி, வரலாற்று பின்புலத்தில் உள்ள ஆவணங்களில் புதைந்திருந்த தகவல்களை வெளிச்சமிட்டு காட்டுகிறது.போர்த்தலைவர்கள், வட்டார ஆட்சித் தலைவராக மாறிய விபரங்களை சுவாரசியமாக பதிவு செய்துள்ளது. ஆவணங்களில் குடும்பங்களின் கொடி வழி அல்லது வம்சாவளி குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் சமூக செய்திகளுடன், சமுதாய வளர்ச்சிக்கு செய்த பணிகளையும் குறிப்பிடுகிறது. தமிழகத்தில் கொங்கு வட்டார வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் நுால்.– மலர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை