/ சுய முன்னேற்றம் / கோழிப் பண்ணை
கோழிப் பண்ணை
கோழி வளர்ப்பு தொழில் நுட்பம் பற்றி முழுமையான பார்வையைத் தரும் நுால். கோழிப் பண்ணை துவங்குவற்கு வழிகாட்டியாக தகவல்களை தாங்கியுள்ளது. முதல் இயலில் முட்டை பற்றிய முழு விபரமும் தரப்பட்டுள்ளது. சிறிய கேள்வி – பதில் பாணியில் இந்த தகவல் தொகுக்கப்பட்டுள்ளது. இது, சந்தேகங்களை முழு அளவில் தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது. உடல் வளர்ச்சிக்கு இறைச்சி உணவின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அலங்கார கோழி வளர்ப்பு, பண்ணை மேலாண்மை, தீவன மேலாண்மை என, கோழிப் பண்ணை அமைப்பதற்கான தொழில் நுட்பத் தகவல்களை முறையாக தெரிவிக்கிறது.கோழிப் பண்ணை துவங்குவோருக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள், கோழி வளர்ப்பதற்கு தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்கள் என தகவல்கள் குவிந்துள்ளன. கோழிப் பண்ணை துவங்க விரும்புவோருக்கு வழிகாட்டும் நுால்.– மதி