/ கதைகள் / குலா (ஒரு பெண்ணின் கதை)

₹ 320

பெண்ணின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளை மையமாக்கி எழுதப்பட்டுள்ள நாவல். இளம் பெண்ணின் வாழ்க்கை சித்திரமாக மலர்ந்துள்ளது. ‘குலா’ என்பது விவாகரத்து என்ற கருத்தை உடையது. நாவலில் சொல்லியிருக்கும், ‘இழுபறியாய் வாழ்க்கை இடரையும் மகிழ்வையும் மாறி மாறி காட்டிக் கொண்டிருந்தது’ போன்ற கருத்துகள், சமுதாயத்திற்கு அவசியம் தேவையான படிப்பினையாக உள்ளன. ஆணுக்கு மட்டும் தான் விவாகரத்து கேட்கும் உரிமை உண்டா... பெண்ணுக்கும் உண்டு என காட்டும் இளம்பெண் எடுக்கும் துணிச்சலான முடிவுகள், சிந்திக்க வைக்கின்றன. கதைப்போக்கில் பெண் எடுக்கும் முடிவை இறுதியில் அற்புதமாக புரிய வைக்கிறது இந்த நாவல். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை