/ கதைகள் / குளமும் பூக்கொடிகளும்

₹ 120

வாழும் காலத்தை புரிந்து அணுகும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதாபாத்திரங்கள் சமூகத்தில் அன்றாடம் சந்திப்போர் போலவே தெரிகின்றன. தொகுப்பில் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்களில் உருவாக்கப்பட்டவை. சக மனித உளச்சிக்கல்களை புரிந்து கொள்ள உதவுகின்றன. இரக்கம், கருணையின் ஊற்றுக் கண்களை திறந்து மனதை தொடுகின்றன. பன்முக கண்ணோட்டத்தை வளர்க்கும் வகையில் இருக்கின்றன. விரிவான அனுபவங்களை வழங்கி, சமகால கலாசாரத்துடனான புரிதலை அளிக்கின்றன. மாறி வரும் உலகை காட்டும் கதை தொகுப்பு நுால். – ஊஞ்சல் பிரபு


புதிய வீடியோ