/ ஆன்மிகம் / கும்பிடு கும்பிடு கும்பிடுக
கும்பிடு கும்பிடு கும்பிடுக
கை கூப்பி வணங்குவதால் கிடைக்கும் நன்மைகளை விளக்கும் நுால். ஐம்புலன்களும், மனமும் ஒடுங்குவதால் அமைதி ஏற்படும் என்கிறது. கும்பிடுவதும், கும்பிடப்படுவதும் ஒன்று தான் என்கிறது. கடவுளை வணங்கினால் கடவுளும் வணங்குவார் என்பதை ஆஞ்சநேயர் தத்துவமாக விவரிக்கிறது. சிவராத்திரி வழிபாடு, பலன்களை விளக்குகிறது. பஜனை, ஜெபம், தியானம் செய்யும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. விநாயகரின் 16 வடிவங்கள் அமைந்த படங்களுடன் அவற்றை வழிபட மூல மந்திரமும் தரப்பட்டுள்ளது. பிரம்மச்சரியம் பேதலிப்பதால் தான் இந்த உலகம் துன்பத்தில் உழல்வதாக கூறுகிறது. திருநங்கையரை தெய்வமாக கருதுவதுடன், தேவையற்ற கவலைகளை துாக்கி எறிய அறிவுறுத்துகிறது. ஆன்மிகத்தின் சிறப்பை உணர்த்தும் நுால். – புலவர் சு.மதியழகன்




