/ வரலாறு / குறுநிலத் தலைவர்கள்
குறுநிலத் தலைவர்கள்
தமிழகத்தில் ஆளுமையோடு விளங்கிய குறுநிலத் தலைவர்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளை தரும் நுால். கட்டி, எட்டி, புல்லி, ஆய் மன்னர்கள், பழுவேட்டரையர், கோசர், முத்தரையர், மலையமான், எழுனியாதன், சுருதிமான்கள், வன்னாடுடையார் உள்ளிட்ட பழந்தலைவர்கள் பற்றி நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இனக்குழுக்கள் பற்றிய பயனுள்ள செய்திகளை தருகிறது. வெட்சிப்போர் வீரர்கள் குறித்த செய்திகள் வழியாக அக்காலச் சமூகத்தை காட்டுகிறது. பழைய நிலப்பரப்பு, எல்லைகள், மூதுார், ஆறு, மலை, அரசியல் அமைப்பு போன்ற தகவல்கள் உள்ளன. கல்வெட்டு, செப்பேடு, நடுகல் விபரங்களை எடுத்துக்காட்டி நம்பகத் தன்மையை கூட்டுகிறது. ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




