/ தமிழ்மொழி / குறுந்தொகை மூலமும் உரையும்

₹ 800

சங்க இலக்கிய எட்டு தொகையில் முதலில் தொகுக்கப்பட்ட நுால். குறுந்தொகை பல்வேறு சங்ககால புலவர்களால் பாடப்பட்டது. கடவுள் வாழ்த்து, பாரதம் பாடிய பெருந்தேவனாரால் இயற்றப்பட்டுள்ளது. மாமூலனார், ஓதலாந்தையார், கயமனார் உள்ளிட்ட புலவர்களின் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. பல பெண் புலவர்கள் புனைந்த பாடல்களும் இடம் பெற்றுள்ளன. கயமனார் என்ற புலவரின் பாடல், குளத்தில் மலர்ந்துள்ள நெய்தல் மலருக்கு பெண்ணின் கண் உவமையாக கூறப்பட்டுள்ளது. அவர் இயற்றிய பாடல்கள், பிற தொகை நுால்களிலும் காணப்படுகின்றன. இது போன்ற புலவர்களின் பாடல்கள் அடங்கியுள்ளன. தமிழக மக்களின் பழங்கால வாழ்வு பண்பாட்டை எடுத்துரைக்கிறது. அரிய பழந்தமிழ் நுால். – சிவா


சமீபத்திய செய்தி