/ சிறுவர்கள் பகுதி / குட்டித் தவளை கோபாலு!

₹ 120

சிறுவர், சிறுமியர் இசைப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்த பாடல்களின் தொகுப்பு நுால். சமூகத்தில் சிறப்பாக செயல்படுவதற்கு துாண்டுகோல் போல் உருவாக்கப்பட்டுள்ளது. சந்தம் நிறைந்த, 30 பாடல்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அத்தை, நீலகிரி சுற்றுலா, டல்... டல்... சுண்டல், திருவாரூர் தேரு, ஊசித்தட்டான், சத்தான உணவு, செய்தித்தாளே செய்தித்தாளே உட்பட தலைப்புகளில் உள்ளன. சிறுவர்களின் அன்றாட வாழ்வில் நல்ல பழக்க வழக்கங்களை பயிற்சி செய்ய கற்பிக்கும் வகையில் உள்ளது. எளிதாக மனப்பாடம் செய்ய இனிய சந்தம் மிகுந்த சொற்களுடனும், அறத்துடனும் அமைந்துள்ளது. இனிமை கலந்து, சிறுவர், சிறுமியரின் எண்ணத்தில் நிறைந்து புத்துணர்வு தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பாடல் தொகுப்பு நுால். – மதி