/ பயண கட்டுரை / குவைத்தில் மூன்று நாட்கள்
குவைத்தில் மூன்று நாட்கள்
மத்திய கிழக்கில் குவைத் பகுதியில் பயணம் செய்து பெற்ற அனுபவத்தை சுவாரசியம் குன்றாமல் பதிவு செய்துள்ள நுால். ஒவ்வொரு செய்தியும் அதன் வரலாற்று மற்றும் வளர்ச்சி பின்னணியுடன் தெளிவாக தரப்பட்டுள்ளது.பயணத்திட்டத்துக்கான ஏற்பாடு, அதில் ஏற்பட்ட பின்னடைவு, மீண்டும் கிடைத்த வாய்ப்பு என ஒவ்வொரு நிகழ்வுகளும் கதைபோல் சித்தரித்து கண்முன் காட்டப்பட்டுள்ளது. விமான பயண அனுபவம், ஒவ்வொரு சந்திப்பின் சிறப்பும் அதற்குரிய பெருமையுடன் தரப்பட்டுள்ளது.மத்திய கிழக்கின் வளர்ச்சி, பண்பாட்டு சிறப்பு, அடிப்படை வளர்ச்சி பற்றி எடுத்துரைக்கிறது. ஒரு பயணமாக மட்டும் சொல்லாமல், வழிகாட்டும் வகையில் பாடமாக அனுபவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிவூட்டும் பயண நுால்.– மதி