/ அரசியல் / லஞ்சம் வாங்காதீர்கள் கொடுங்கள்
லஞ்சம் வாங்காதீர்கள் கொடுங்கள்
33/4 (15/4) ராமநாதன் தெரு, தி.நகர்., சென்னை-17. (பக்கம்: 224 ) நட்பு , பழக்கம், தாட்சண்யம் பாராமல் மனதுக்குப்பட்டதை எழுதும் ஆசிரியர், அரசியல் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும், பத்திரிகைத் துறையின் தூணாக இருப்பவர்களுக்கும் நெருக்கமானவர். சமுதாயம், ஜனநாயகம், பணநாயகம், அரசியல்வாதிகள் ஊழல் என்ற கருத்துக்களில் 54 தலைப்புகளில் ஆசிரியர் பல்வேறு தரப்பினரைச் கோபமாகச் சாடுகிறார். ஆந்திர முன்னாள் முதல்வரும், மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன் இப்போது அங்கே சர்ச்சை அரசியல்வாதி. அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரையை ஆசிரியர் முடிக்கும்போது "அப்பன்கள் ஆஸ்தியைத்தான் தருகிறார்கள், அனுபவத்தை அல்ல என்று கூறி முடிக்கிறார். துணிச்சல் எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர், இப்படிப் பரபரப்பு கருத்துக்களை அள்ளித் தெளித்திருப்பது பலருக்கு மகிழ்ச்சியைத் தரலாம்.