/ கதைகள் / லியோ டால்ஸ்டாயின் உலகப் புகழ் பெற்ற நீதிக் கதைகள்
லியோ டால்ஸ்டாயின் உலகப் புகழ் பெற்ற நீதிக் கதைகள்
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை கருத்துகளை பேசும் நீதிக் கதைகளின் தொகுப்பு நுால். உழைப்பின் உயர்வை பேசுகிறது. ஏழையாக இருந்தாலும், நிம்மதியான வாழ்க்கை தான் அர்த்தம் கொண்டதாக்கும் என்கிறது. குடிகாரன் குடும்பத்தில் ஏற்படும் துன்பங்களை உணர்த்துகிறது.எந்த சூழலிலும் அன்பு ஒன்று தான் உயர்ந்து நிற்கும் என்கிறது. பேராசையின் விளைவுகளை விவரிக்கிறது. ஏழ்மை வாழ்வியலை உணர வேண்டும் என எடுத்துரைக்கிறது. நிலம் எல்லாருக்கும் உரிமை கொண்டது என சொல்கிறது. அனைத்து தரப்பினரும் வாசிக்க வேண்டிய நுால்.– டி.எஸ்.ராயன்