/ புத்தக மதிப்புரை / லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்

₹ 250

ஆஞ்சநேயரை வழிபடுவதால் ஏற்படும் சிறப்புகளை முன்வைத்துள்ள படைப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது, லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர். லேடீஸ் ஸ்பெஷல் இதழ், 30ம் ஆண்டாக தீபாவளி மலரை வெளியிட்டுள்ளது. வித்தியாசமான கதைக்களங்கள் மற்றும் பாத்திரங்களுடன் அமைந்து 24 சிறுகதைகள் உள்ளன. நகைச்சுவை துணுக்குகள், போட்டோ கமென்ட்களுடன் துறுதுறுப்புடன் படைப்புகள் அமைந்துள்ளன. தலைமுறை இடைவெளியை நிரப்பும் வகையில் அமைந்துள்ள, ‘பாட்டி பிளஸ் ஜென்ஸ்’ படக்கதை அறிவுசார் புதுமையுடன் உள்ளது. ஆஞ்சநேயரின் அருமை பெருமைகளை கூறுவதுடன், அபூர்வ தகவல்களையும் கொண்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் பற்றிய ஆன்மிக செய்திகள் ஆர்வம் ஊட்டுகின்றன. ஸ்ரீமுக்குருணி பிள்ளையார், ஸ்ரீகுருவாயூரப்பன், ஸ்ரீமதுரை மீனாட்சியம்மன், ஸ்ரீலஷ்மி நரசிம்மர் என சுவாமிகளின் வண்ணப்படங்களுடன் கலகலப்பூட்டுகிறது. வண்ணங்கள் மின்னிடும் சோலையாக காட்சி தருகிறது.


புதிய வீடியோ