/ கட்டுரைகள் / பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

₹ 165

கடவுள், வழிபாடு, சமயம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழ் மக்கள், வணங்கிய கடவுளர்களை தொல்காப்பியம் முதலாக அறிந்து கொள்ள முடிகிறது. இந்த நுால், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் கொள்கையை தமிழ் மக்களின் கடவுள் கொள்கையாகப் போற்றுகிறது. ஆனால், ஒரே கடவுள் என்ற எல்லைக்கு அப்பால் பலரை வணங்கியதை தெளிவு படுத்துகிறது.பண்டைக் காலத்திலே, மாமிசம் மற்றும் காய்கறியை உணவாக கொண்டவர்கள் இருந்துள்ளனர். உணவு பழக்கத்தால் உயர்வு, தாழ்வு பேணப்படவில்லை. புளிக்கறியை விரும்பி உண்டது போன்ற பல தகவல்களை எளிய மொழி நடையில் விளக்குகிறது நுால். ஜாதி பற்றியும், தமிழ் மக்களின் நம்பிக்கை குறித்தும் தெளிவுபடுத்துகிறது. பழந்தமிழர் வாழ்வியலை கூறும் இந்த நுாலை, ஒரு களஞ்சியம் எனலாம்.– முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை