/ பொது / வாழ்க்கை: அடிப்படைக் கேள்விகள்
வாழ்க்கை: அடிப்படைக் கேள்விகள்
வாழ்க்கை பற்றி தெளிவு ஏற்படுத்தும் தத்துவ விளக்க நுால். தனிமனிதன் மற்றும் சமூக நோக்கில் நோக்கி, தெளிவான தீர்வுகளை முன்வைக்கிறது. இன்றைய நெருக்கடி, தேசியம், அறிவுடைமை, தனிமை உணர்வு, துன்பம், விழிப்புணர்வு, பாலியல், அன்பு உள்ளிட்ட, 38 தலைப்புகளில் சிந்தனையை துாண்டும் கட்டுரைகள் உள்ளன. தத்துவ அலசல் அடிப்படையில் அமைந்துள்ளன. பிரச்னைகளை நேரடியாக எதிர்நோக்கி, முழுமையான விடுதலை பற்றி விளக்கப்பட்டுள்ளது. பிரச்னைகளின் படிநிலைகளை ஆழ்ந்து நோக்கி, விரிவாக அலசி அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. நெருக்கடிக்கான காரணங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள விதத்தை உணரச் செய்கிறது. வாழ்க்கையின் அடிப்படையை புரிய வைக்கும் தத்துவ நுால். – ராம்




