/ சிறுவர்கள் பகுதி / முல்லை மலர்கள் சிறுவர் பாடல்கள்
முல்லை மலர்கள் சிறுவர் பாடல்கள்
சிறுவர் உள்ளத்தில் பதியும் கருத்துள்ள பாடல்களின் தொகுப்பு நுால். நேர்மையான எண்ணங்களை விதைக்கும் வகையில் உள்ளன. அப்பா, அம்மாவை போற்றி பாடும் பாடல்களின் தொடர்ச்சியாக, அப்பத்தாளின் அன்பை வர்ணிப்பது மிக அருமையாக உள்ளது. அதில், ‘பண்பின் களஞ்சியம் அப்பத்தாள் பாச பெருநதி அப்பத்தாள்’ என்ற வரிகள் காலத்தால் நிலைத்து நிற்கும். மஞ்சள், நீலம், பச்சை, சிவப்பு, கருப்பு, வெள்ளை என உயிரினங்களை சொல்லும் பாங்கு மனதில் பதியும் வண்ணம் உள்ளது. ஆட்டுக்குட்டி, யானை, காகம் என்று சிறுவர் விரும்பும் தலைப்புகளில் அருமையாக உள்ளன. பாடல் கருத்துகள், சிறுவர் – சிறுமியர் மனதில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்த நுால். – சீத்தலைச்சாத்தன்




