/ வரலாறு / மொழியியல் வரலாறு
மொழியியல் வரலாறு
மொழியியல் குறித்து வரலாற்று பூர்வமாக விளக்கும் நுால். உலக அளவில் அறிஞர் கருத்துகளை உள்வாங்கி தெளிவாக எழுதப்பட்டுள்ளது. மொழியும், மொழியியலும், மொழியியல் வளர்ச்சி வரலாறு பற்றிய விபரங்களும் முதன்மையாக தரப்பட்டுள்ளன. தொடர்ந்து பிற நிலப்பரப்புகளில் பழங்காலத்தில் நடந்துள்ள மொழியியல் பங்களிப்புகளை எடுத்துரைக்கிறது. கால அடிப்படையில் மொழி வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களை அறிய வைக்கிறது. உலக அளவில் மொழியியல் ஆராய்ச்சி பற்றிய தகவல்கள் உள்ளன. மொழியியலில் பல்வேறு வகை கோட்பாடுகள் ஏற்பட்டது குறித்த விபரங்களும் தரப்பட்டுள்ளன. மொழியின் கலாசார பயன்பாடு, பண்பாட்டு முக்கியத்துவம் குறித்து அறிய வைக்கிறது. மொழியியல் குறித்து வரலாற்று பூர்வமாக தெளிவு தரும் நுால். – ஒளி




