/ வாழ்க்கை வரலாறு / லால் பகதுார் சாஸ்திரியின் மர்ம மரணம்
லால் பகதுார் சாஸ்திரியின் மர்ம மரணம்
முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி மரணத்தை மர்மம் உடையதாக கருதி அலசும் நுால். அவரது மரணத்தின் போது ஏற்பட்டிருந்த அரசியல் சூழல் பற்றி கூறுகிறது. மரணம் பற்றிய யூகங்களை எழுப்புகிறது. ரஷ்யாவில் தாஷ்கண்ட் ஒப்பந்தத்திற்கும், மரணத்திற்கும் தொடர்பு உண்டா என அலசுகிறது. உடலை பரிசோதித்த ரஷ்ய மருத்துவர், மருத்துவ அறிக்கையில் கையெழுத்திட மறுத்தது; டைரி மாயமானது பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. வரலாற்றை விவாதத்திற்கு உள்ளாக்கும் நுால்.– டி.எஸ்.ராயன்