/ மருத்துவம் / லண்டன் பாட்ச் மலர் மருத்துவம்
லண்டன் பாட்ச் மலர் மருத்துவம்
மாற்று மருத்துவம் பற்றிய நுால். எளிய மருத்துவ நடைமுறையில், 38 மருந்து பயன்பாட்டை குறிப்பிடுகிறது. மனித எண்ணங்களுடன் உடலில் சுரப்பிகள் இயக்கம் தொடர்புடையதாக கூறுகிறது. எதிர்மறை எண்ணத்தை, மாற்று மருத்துவ முறையால் நீக்கும் வழிமுறையை எடுத்துரைக்கிறது. மனநிலையே உடல் பாதிப்பிற்கு காரணமாவதாக கூறுகிறது. உணர்வுகளை மனதில் பூட்டி, சிரித்த முகத்துடன் இருப்பது படபடப்பையே தரும். தனக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் என்ற அதிகார சிந்தனையில் இருப்போர் குறித்தும் எடுத்துரைக்கிறது. மனநிலையில் மாறுதல் ஏற்படுத்தும் உபாதைகளை களைய மருத்துவ ஆலோசனை கூறும் நுால். – டாக்டர் கார்முகிலோன்