/ இலக்கியம் / மு.அருணாசலம்
மு.அருணாசலம்
தமிழ் இலக்கியத்தில் சிறப்பான பணிகள் செய்த மு.அருணாசலம் குறித்த நுால். இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வெளியாகியுள்ளது.இலக்கிய வரலாற்றை எழுதிய செய்தி வியப்பை தருகிறது. கட்டுரை, பதிப்பு, சைவ சமயம், தமிழிசை, இதழியல், நாட்டுப்புறவியல், காந்தியக் கல்வி என பல்துறை சார்ந்து இயங்கியது குறித்த செய்திகள் தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. எட்டு தலைப்பில் விபரங்களை வெளிச்சமிடுகின்றன. எழுதிய புத்தகங்கள், தமிழ் வசன நடை குறித்து எழுந்த விவாதங்கள், பதிப்பித்த நுால்கள் யாவும் காலவரிசைப்படி சொல்லப்பட்டிருக்கின்றன. முக்கூடற்பள்ளு, தமிழிசை வரலாறு, நாட்டுப்புறப்பாடல், கதைப்பாடல் ஆய்வுகளில் முன்னோடியாக திகழ்ந்த விபரங்களையும் பதிவு செய்துள்ள நுால்.– ஊஞ்சல் பிரபு




