/ கதைகள் / மகளே! மங்களம் தரும் மஞ்சப்பையை மறந்து விடாதே!
மகளே! மங்களம் தரும் மஞ்சப்பையை மறந்து விடாதே!
பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.மதுவின் தீமையை சாடும் விவசாயி, அஞ்சலக சேமிப்பு குறித்த விழிப்புணர்வு, நட்பின் சிறப்பு, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை உணர்த்தும் கருத்துகளும் உள்ளன.காதல் வலையில் விழுந்தோர் வாழ்வில் மாற்றம், மனநிலை பாதிக்கப்பட்ட தம்பதியரின் உண்மை அன்பு, பிரிந்தவர்களை சேர்த்து வைத்த விதம் போன்ற கருத்துகளும் உள்ளன. மருத்துவ சேவையை வணிகமாக்கியவர் மனதை மாற்றிய அருள் உள்ளம், கல்வி பெருமை உணர்த்தும் கதைகளும் இடம்பெற்றுள்ளன. விழிப்புணர்வு தரும் நுால்.–- புலவர் சு.மதியழகன்