/ கட்டுரைகள் / மனம் செய்யும் மாய வித்தை
மனம் செய்யும் மாய வித்தை
வேண்டுவது போல் வாழ்க்கை அமைவதாக உரைக்கும் நுால். அனுபவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. இதில், போதிக்கும் நீதிகள் வாழ்வின் நெறிமுறைகளாக உள்ளன. குடிப்பழக்கத்தை அப்பட்டமாக சொல்லி மீள்வதற்கு மனைவி பட்ட துயரங்கள் கூறப்பட்டுள்ளது, போதை பிரியர்களை மாற்றும் வகையில் உள்ளது. ஹனுமானின் அமர்ந்திருக்கும் தோற்றம் குறித்து அபூர்வமான தகவல்களை தெரிவிக்கிறது. இரண்டு மாத குழந்தை, 17 மணி நேரம் ஒரு நாளில் துாங்க வேண்டும்; பெரியவர்கள் ஒன்பது மணி நேரம் துாங்குவது தான் இயற்கை விதி என்கிறது. இதற்கு மாறாக செயல்படுபவர்களுக்கு உடல், மனக்கோளாறுகள் நேரும் என எடுத்து சொல்கிறது. நிதானமாக படிக்க ஏற்ற நுால். – சீத்தலைச்சாத்தன்




