/ கட்டுரைகள் / மகிழ்ச்சிச் சிறகுகள்
மகிழ்ச்சிச் சிறகுகள்
‘தினமலர்’ நாளிதழில் வெளியான பல்துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். முன்னுரையில் நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது. காலம் என்ற சிற்பி செதுக்குவதில் நாம் சிற்பமா, இல்லை சிதறி விழும் கற்களா... சிற்பமாக வேண்டுமானால் சாதனை செய்ய வேண்டும். பூமியை படுக்கையாக்குவதும், பாதையாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.எல்லா பறவைகளுக்கும் உணவை படைத்து இருக்கிறான் இறைவன். ஆனால், கூடுகளுக்கு வந்து கொடுப்பதில்லை; தேடிச் சென்று தான் பெற்றுக் கொள்ள வேண்டும். மனோபலம், முடியும் எனும் நம்பிக்கை, நேர நிர்வாகம், உற்று கவனித்தல், எதையும் முழுமையாக செய்தல், மனச்சோர்வு நீக்கும் மந்திரச் சொற்களால் தொகுக்கப்பட்ட களஞ்சியம்.-– ஆனந்தம்