/ கட்டுரைகள் / மகிழ்ச்சிச் சிறகுகள்

₹ 270

‘தினமலர்’ நாளிதழில் வெளியான ‘என் பார்வை’ என்ற பல்துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நுால். காலம் எனும் சிற்பி நம்மை செதுக்கிக் கொண்டிருக்கிறான். அதில் சிற்பமா... இல்லை சிதறி விழும் கற்களா? சிற்பமாக வேண்டுமானால் சாதனை செய்ய வேண்டும். பூமியை படுக்கையாக்குவதும், பாதையாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.எல்லா பறவைகளுக்கும் உணவை படைத்து இருக்கிறான் இறைவன். ஆனால், கூடுகளுக்கு வந்து கொடுப்பதில்லை; தேடிச் சென்று தான் பெற்றுக் கொள்ள வேண்டும். அது போல தேடிப் பெற வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டுள்ளது. வெற்றியாளர்களின் மத்திரச் சொற்கள் என சிந்தனை முத்துக்களால் தொகுக்கப்பட்டுள்ள களஞ்சியம்.–- ஆனந்தம்


சமீபத்திய செய்தி