/ ஆன்மிகம் / மகா பெரியவா (பாகம் – 3)

₹ 210

மகானுடன் பழகியவர்கள், மகானுடன் வாழ்ந்தவர்கள், மகானுக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் எல்லாருமே ஆனந்தமாக வாழ்ந்தனர்; வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட மகா பெரியவா குறித்து பி.சுவாமிநாதன் தொகுத்து எழுதியுள்ள, ‘மகா பெரியவா– 3’ நுாலில் இருந்த சில தேன் துளிகள்:ஒரு மனிதனை அற வழியில் செல்லத் துாண்டுபவை அவனுள் இருக்கின்ற பக்தி எண்ணங்கள் தான். மனதில் நேர்மை, நியாயம், கருணை, அன்பு போன்ற குணங்கள் தெய்வ பக்தியாலே ஏற்படும். ஆன்மிக உலகில் புரட்சியாளர் என்று ஆதிசங்கரரையும், ராமானுஜரையும் சொல்வோம்.அவர்களுக்கு அடுத்து அந்தப் புரட்சியை மிக அமைதியாக நடத்தி, உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியவர் காஞ்சி மகா பெரியவா என்றால், மிகை இல்லை. ‘மதம் எந்த ஒரு காலத்திலும் மனிதர்களைப் பிரிக்கக் கூடாது’ என்ற கொள்கை கொண்டவர் மகா பெரியவா.பக்திக்கும், மனிதாபிமானத்துக்கும் ஜாதி, மதம் கிடையாது. இதைத்தான் மகா பெரியவா தன் உபதேசங்களில் பெரிதும் வலியுறுத்தினார். ஒரு துறவி என்பவர் உலகத்தின் நலனை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் மகா பெரியவா!தன்னை நம்பி வருகின்ற பக்தர்களின் நேர்மையான,- நியாயமான பிரார்த்தனைகளை நிறைவேற்றுபவர் தான் உண்மையான துறவி. மகா பெரியவா தன்னை நம்பி வந்த அனைவரின் பிரச்னைகளையும் தீர்த்து வைத்தார். முழுமையாக பக்தி தேன் பருக நுாலை வாங்கிப் படியுங்கள்.– இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை