/ ஆன்மிகம் / மகா பெரியவா (பாகம்–8)

₹ 220

புண்ணியம் செய்திருந்தால் தான், சில அரிய பொருள்கள் கிடைக்கும். அவ்வாறு அடைந்த பொக்கிஷங்களில் ஒன்றுதான் இந்த புத்தகம். கலியுகத்தில் தெய்வத்தை காண்பது அரிது. ஆனால், தெய்வம் எப்போதும் தன் கடமையை செய்யாமல் இருப்பதில்லை. இறைவன் வடிவில் மகான்களை இந்த பூமிக்கு அனுப்பி நற்செயல்கள் நிறைவேற வைக்கிறது. அவ்வாறாக உலகுக்கு வந்த மகான் தான் காஞ்சி மகா பெரியவர் என்பதை எடுத்துரைக்கிறது. நுாறாண்டுகள் வாழ்ந்து நடமாடும் தெய்வமாக காட்சியளித்த காஞ்சி பெரியவர் செய்த அற்புதங்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளன. அவை பற்றிய விபரங்களை இந்த புத்தகம் விளக்கமுடன் தருகிறது. காஞ்சி மகா பெரியவர் ஒரு மாட்டுக் கொட்டிலில் தங்கியிருந்த போது செய்த அற்புதத்தை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் பக்தரின் கணவரை, இங்கிருந்தபடியே காப்பாற்றியதை உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் உள்ள அரண்மனையில் மகா பெரியவரின் படம் மாட்டப்பட்டிருப்பதன் பின்னணி குறித்த விபரங்களும் உள்ளன. இது போல் விபரங்கள் உடைய ஏராளமான வித்தியாசமான தகவல்கள் இந்த புத்தகத்தில் குவிந்து உள்ளன. எளிய நடையில் புரிந்துகொள்ளும் விதமாக எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை வாசித்தால் மனதில் பக்தி பட்டாம்பூச்சிகள் பறக்கும் என்பதில் ஐயமில்லை. – தி.செல்லப்பா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை