/ ஆன்மிகம் / மகாபாரதம் ஆதி பருவம்
மகாபாரதம் ஆதி பருவம்
மகாபாரதத்தில் ஆதி பருவத்தை விவரிக்கும் நுால். குரு வம்சத்தின் வரலாறு, பாண்டவர்-, கவுரவர் பிறப்பு, கல்வி முறை, சாந்தனு, கங்கை, சத்யவதி, பீஷ்மர், வசிஷ்டர் குறித்து விரிவாக தருகிறது. பாண்டவர் இந்திர பிரஸ்தம் உருவாக்குதல், அர்ச்சுனன் வனவாசம், சுபத்திரை திருமணம், காண்டவ வன தகனம் என ஆதி பருவம் நிறைவுறுகிறது. நெடிய கதை 848 பாடல்களில் படைக்கப்பட்டுள்ளது. கதைப்பாடலாக எளிய நடையில் அமைந்துள்ளது. அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை சருக்கத்தில் காஞ்சி, திருவண்ணாமலை, திருக்கோவிலுார், சிதம்பரம் போன்ற தலங்கள் குறித்து நேர்த்தியாக கூறப்பட்டுள்ளது. திரவுபதி மாலையிட்ட சருக்கம், இந்திரபிரஸ்தம், காண்டவ தகன சருக்கத்தையும் எளிமையாக்கி தந்துள்ள நுால். – பின்னலுார் விவேகன்




