/ ஆன்மிகம் / மகாபாரதத்தின் தெய்வீக மாதர்கள்
மகாபாரதத்தின் தெய்வீக மாதர்கள்
மகாபாரத காவியத்தின் திருப்புமுனைகளாக இருக்கும் மாதர்களின் பெருமைகளை சிறப்புடன் பேசும் நுால். ஹிந்தி மொழியில் தினகர் ஜோஷி எழுதியதன் தமிழாக்கமாக மலர்ந்துள்ளது.பொறுமையே பெருமை தரும் என கதா மாதர்கள் உணர்த்துகின்றனர். மூத்த ராஜமாதா சத்தியவதி, துயரங்களை சந்திக்கும் குந்தி தேவி, கண்களைக் கட்டிக் கொண்ட காந்தாரி, சபதம் செய்த திரவுபதி என பெண்களுக்கு பயன்படும் பல பாடங்கள் உள்ளன.மகாபாரத மாதர்களின் மகத்தான பங்கை பெருமைப்படுத்தும் நுால்.– முனைவர் மா.கி.ரமணன்