/ வாழ்க்கை வரலாறு / மகாகவி பாரதியார் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்
மகாகவி பாரதியார் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்
மகாகவி பாரதியார் என்றவுடன் நினைவுக்கு வருவது அவர் படைத்த எழுச்சிமிக்க கவிதைகளும், வீரமும், பாடல்களும், கட்டுரைகளும் தான். பாரதியாரின் பள்ளிப்படிப்பு, திருமணம், அரண்மனைப் பணி, ஆசிரியப் பணி, பத்திரிகை பணியை விவரிக்கும் நுால்.பாரதியாரின் வாழ்வில் அறியாத தகவல்களை எடுத்துரைக்கிறது. பாரதியார் குழந்தை உள்ளம் படைத்தவர், பாரதியின் புதிய ஆத்திசூடி பிறந்த கதையும், பாரதிதாசன் கண்ட வீரபாரதியும் என தலைப்புகள் படிப்பதற்கு இனிமையாக உள்ளன.பெண் விடுதலை, தன்னம்பிக்கை வளர்ப்பு, மூடப்பழக்கங்களை எதிர்த்து போராடியது பற்றிய சுவையான நிகழ்வுகளை கொண்ட நுால்.– வி.விஷ்வா