/ பயண கட்டுரை / மகாராஜாவின் பயணங்கள்
மகாராஜாவின் பயணங்கள்
பஞ்சாப் பகுதியில் கபுர்தலா சமஸ்தானத்தை ஆட்சி செய்த கடைசி மன்னர் ஜகத்ஜித் சிங் எழுதிய பயண அனுபவ நுால். உலகில் பல நாடுகளில் கண்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த மன்னர், ஐரோப்பாவில் பல பயணங்கள் செய்துள்ளார். பிரஞ்சு மொழியை நன்கு அறிந்துள்ளார். ஆசிய நாடுகளான ஜப்பான், சீனா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் பயணம் செய்த அனுபவத்தை தந்துள்ளார். அந்த காலத்தில் கண்டதை பதிவு செய்துள்ளார். அவரது விருப்பத்தில் பிடித்த, பிடிக்காதவை என பிரித்து எழுதியுள்ளார். அந்தந்த பகுதியில் கண்டவற்றையும், சந்தித்த மனிதர்களையும், உணவு விபரங்களையும், தங்கிய இடங்களையும் பதிவு செய்துள்ளார். பல சுவாரசியங்கள் நிறைந்த நுால்.– ஒளி