/ ஆன்மிகம் / திருநெல்வேலியில் முக்கிய திருத்தலங்கள்
திருநெல்வேலியில் முக்கிய திருத்தலங்கள்
திருநெல்வேலி பகுதியில் முக்கிய கோவில்கள் பற்றிய தகவல்களை தரும் நுால். சிற்ப கலையால் புகழ் பெற்ற வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார் அருள் பாலிக்கும் திருத்தலம், கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டதை தெரிவிக்கிறது. தகப்பன், தாயுமாகி அருள் வழங்கும் நெல்லையப்பர் காந்திமதி திருத்தல சிறப்பு பற்றி உரைக்கிறது. திருக்குறுங்குடி கோவில் பற்றியும் செய்திகள் உள்ளன. வள்ளிக்கு தனி சன்னிதியுள்ள வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி பெருமையை அறிய தருகிறது. உவரி, சுயம்புநாதர் தல வரலாறும் விவரிக்கப் பட்டுள்ளது. குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. நெல்லை திருத்தலங்கள் பற்றிய நுால். – புலவர் சு.மதியழகன்




