/ கட்டுரைகள் / மகிழ்ச்சி தலாய் லாமா

₹ 150

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணாதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 408) ஹோவர்ட் சி கட்லர் என்பவர் தலாய்லாமாவுடன் மேற்கொண்ட பற்பல உரையாடல்களின் வழியாக அறிந்த கருத்துகளை தொகுத்து, தலாய்லாமாவின் ஒப்புதலை பெற்று ஒரு நூலாக்கி தந்தார். தமிழில் அந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திபெத்திய மக்களின் ஆன்மிக குரு, தலாய்லாமா மிகச்சிறந்த சிந்தனையாளர். வாழ்க்கையை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள வேண்டும் என்றும், எதிலும் முழுமையான நிறைவை எய்திட வேண்டும் என்றும், உறவுப் பரிமாற்றங்கள் வலிமை பெற வேண்டும் என்றும், வேதனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும், சொல்லுவதோடு இவற்றை சாதிக்கத்தக்க வழிமுறைகளையும், தலாய்லாமா விளக்கமாக சொல்லியுள்ளார். ஆன்மிகம் என்பதன் விளக்கம், தியானத்தின் மேன்மை, நமது பார்வையின் கோணம், தமக்கு தாமே தேடி கொள்ளும் துன்பங்கள், மனித வாழ்க்கையின் உண்மையான மதிப்பு, நெளிவு, சுளிவான சிந்தனை முறை, அன்பான அணுகுமுறை என, பலவகையால் பயனுள்ள கருத்துகள் இந்நூலில் அடங்கியுள்ளன. கருணைமிக்க பார்வை, அகன்ற மனப்பான்மை மனக்கதவை திறக்கிறது. உற்றார், உறவினருக்கு இதமான உறவாட தொடங்குகின்றனர். திறந்த மனத்துடன் உலகத்தை பார்க்கின்றனர். எல்லாரும் நண்பர்களே என காண்கின்றனர். எதையும் பார்க்கும் கோணத்தில் தான் அதன் தன்மை தெரிகிறது. மகிழ்ச்சியுடன் வாழ்வது ஒரு கலை, அதைப் பெறுவது ஓர் அருங்கலை. இவையே நூலின் சாரம். படித்து பயன்பெற வேண்டிய நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை