/ மருத்துவம் / மக்கள் மருத்துவம்

₹ 150

உணவின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் நுால். ஒரு நாளில் உடலில் எந்தெந்த உறுப்புகள் என்னென்ன நேரத்தில் சிறப்பாக இயங்கும் என விவரிக்கப்பட்டுள்ளது. அருகம்புல்லின் மருத்துவ குணத்தை அறிய தருகிறது. சமையலில் உபயோகப்படுத்தும் கொத்தமல்லி கீரையின் பெருமையை உணர வைக்கிறது. பேரீச்சம் பழத்தின் பெருமையும் அருமையும் அறிய தருகிறது. பிரம்ம விருட்சம் என போற்றப்படும் முருங்கையின் பெருமை பற்றி விரிவான தகவல்கள் உள்ளன. மாதுளம் பழத்தின் பெருமை என்ன, அதை எப்படி சாப்பிட வேண்டும் என அறிவுறுத்துகிறது. கறிவேப்பிலையின் மருத்துவ குணம் மலைக்க வைக்கிறது. உணவை உணர்ந்து நலமுடன் வாழ்வதற்கு உரிய செய்திகள் உள்ளன. அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். – டாக்டர் கார்முகிலோன்