/ வாழ்க்கை வரலாறு / மக்கள் தலைவர் அம்பேத்கர் எழுச்சியும், கிளர்ச்சியும்

₹ 250

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட மக்கள், மலைவாழ் மக்கள், குற்றப்பரம்பரையினர், சிறு பான்மையினர், பெண்கள், குழந்தைகள் என அனைத்து மக்களையும் ஒரு சேர நேசித்தவர்.மக்கள் அறிவோடும், தன்மானத்தோடும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக அவர்களை போராட்டக்களம் நோக்கி நகர்த்திச் சென்றவர், அவர்களின் முன்னேற்றத்திற்காக வாதாடியவர், போராடியவர்.அவரின் வாழ்க்கையை எளிமையாக விவரிக்கிறது இப்புத்தகம்.அம்பேத்கர் பிறந்து, 125 ஆண்டுகள் ஆனபோதும், இன்றளவும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பதன் பின்னணியும், மராத்திய மாநிலத்தில் பிறந்தாலும் இந்தியா முழுவதுமாக அவர் கொள்கையாலும், கோட்பாடுகளாலும் வேர் பரப்பி விழுது விட்டு விண்ணைத் தொடும் விருட்சமாக கிளை பரப்பியுள்ள காரணத்தையும் தெளிவாகப் புரியச் செய்கிறது புத்தகம்.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்று சொன்ன போராளி முகம் ஒருபுறம் அம்பேத்கருக்கு இருந்தாலும், இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கும் ஆணையத்தின் தலைவராகவும், இந்திய சட்ட அமைச்சராகவும் விளங்கிய பெருந்தகை முகமும் இருக்கிறது. அந்த வகையில், அம்பேத்கர் என்ற ஆளுமை குறித்தான முழு சித்திரத்தை முன் வைக்கிறது இந்த நுால்.– ஸ்ரீநிவாஸ் பிரபு