/ வாழ்க்கை வரலாறு / மலசர் பழங்குடிகள்
மலசர் பழங்குடிகள்
அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை - 78.போன்: 044-6538 3000 (பக்கம்: 288) இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியினர் என்போர், அரசு முறை தோன்றுவதற்கு முந்தைய சமூகத்தார் என்று, மானிடவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். தமிழகத்தில், 26 அட்டவணைப் பழங்குடிகள் இருக்கின்றனர். இந்நூலில் பாலக்காடு, கோயம்புத்தூர் மாவட்ட மலைவாழ் மலசர் பழங்குடியினர் குறித்துக் களஆய்வு மூலம் பல தகவல்களைச் சேகரித்துக் கொடுத்துக் தந்திருக்கிறார் ஆசிரியர். மலசர்களின் குடியிருப்புப் பகுதிகள், அவர்களின் சமூக அமைப்பு,பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றைத் தெளிவாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். சுவையான நூல்.