/ கட்டுரைகள் / மனதின் குரல் தொகுதி – 5

₹ 400

வானொலியில் பிரதமர் ஆற்றிய, ‘மன் கி பாத்’ என்னும் புகழ்பெற்ற உரையின் தமிழாக்கம். அக்டோபர் 2020 முதல், ஜனவரி 2022 வரை ,16 உரைகளின் தொகுப்பாக உள்ளது. கிராமப்புற பொருளாதாரம், தற்சார்பு பாரதம், துாய்மை இந்தியா, உள்ளூர் பொருட்களை உலக அளவில் சந்தைபடுத்துதல் போன்றவற்றிற்கு உறுதுணையாய் நின்று பங்காற்றுவோருடன் உரையாடிய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. சலுான் நடத்தும் மாரியப்பன், நுாலகம் ஏற்படுத்திய நிகழ்வு, கொரோனா பெருந்தொற்று காலத்திலும், தமிழ் மொழியை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிற்றுவிக்கும் விழுப்புரம் ஆசிரியை கற்பித்தல் நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. திருவண்ணாமலை, வேலுார் மாவட்ட மக்கள் முயற்சியால் நாக நதியில் நீர் நிரம்பிய நிகழ்வு, இளநீர் விற்கும் உடுமலைப்பேட்டை தாயம்மாள், பள்ளிக்கூடம் கட்ட நன்கொடை வழங்கிய நிகழ்வு ஆகியனவும் இடம் பெற்றுள்ளன.பிரதமர் வீட்டு வசதி திட்டம், ஆயுஷ் மான் திட்டம் மூலம் பயனடைந்த பயனாளிகளின் நெகிழ்வுகளை பொது மக்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. எதிர் கால இந்தியாவின் வரலாறாக உள்ளது. இது புத்தகமல்ல; பொக்கிஷம்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை