/ கட்டுரைகள் / மாணவர் மனசு
மாணவர் மனசு
மழலை அரும்புகளின் மனவோட்டம் அறிந்து போதிக்கும் முறையை அனுபவங்கள் வாயிலாக கற்பிக்கும் நுால். சுவையான அனுபவ தொகுப்பாக மலர்ந்துள்ளது. மற்றவர்கள் பழி சுமத்தி, சேட்டையை கச்சிதமாக அரங்கேற்றும் சிறுவர்களின் குறும்பு, நகைச்சுவை தருகிறது. ஆசிரியர் வீட்டை மழலையர் துப்பறிந்து கண்டுபிடிப்பது வியப்பூட்டுகிறது. கதைகளை உல்டா செய்வது, போட்டியில், பாயசம் குடித்ததாகக் கூறி பயமுறுத்துவது போன்ற சுட்டித்தனம் மகிழ வைக்கிறது.போதையுடன் வந்த தந்தையை கண்டித்தபோது கூறிய காரணம் நெகிழ வைக்கிறது. கல்வி அதிகாரிகள் மனோபாவமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. கற்றலில் இனிமையையும், எளிமையையும் கடைபிடிக்க வலியுறுத்துகிறது. மழலையர் பள்ளி ஆசிரியர்கள் படிக்க வேண்டிய நுால்.– புலவர் சு.மதியழகன்