/ தமிழ்மொழி / மாணவர் தமிழ் இலக்கணம்
மாணவர் தமிழ் இலக்கணம்
இன்றைய காலத்திற்கு ஏற்ப, தமிழிலக்கணத்தை எளிமைப்படுத்தி தரும் நுால். அனைத்து பகுதியிலும், புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான எடுத்துக்காட்டுகளைக் கூறியுள்ளார்.பெரும்பாலானோர் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று இலக்கணத்தில் மட்டும் கவனம் செலுத்துவர். இங்கு, யாப்பிலக்கணம் மற்றும் அணியிலக்கணத்தையும் தெளிவாக சான்றுகளுடன் விரிவாக விளக்கியுள்ளார். சான்று பாடல்களில், சங்க இலக்கியப் பாடல்களையும் சேர்த்துள்ளது சிறப்பாகும். தமிழ் மொழி இலக்கணம் குறித்து, எளிய வழியில் அறிய இந்த நுால் உதவும்.– முகில் குமரன்