/ கதைகள் / மங்காப் புகழ் பெற்ற மகாராணி மங்கம்மாள்

₹ 200

ராணி மங்கம்மாளின் வீர தீரத்தை விவரித்துள்ள சரித்திர நாவல். உண்மை சம்பவங்கள் வரலாற்று பின்னணியுடன் பின்னிப் பிணைந்துள்ளன. கூட இருந்தே குழி பறிப்பது தான் ராஜதந்திரம்; நம்ப வைத்து கழுத்தறுக்கும் நயவஞ்சகம் தான் சாணக்கியத்தனம் என்பது போல் நிகழ்வுகள் உள்ளன. மதுரை, தஞ்சை, திருச்சியில் நாயக்க மன்னர்கள் ஆட்சித்திறன் வியப்பூட்டுகிறது. போர்க்கால வர்ணனை தத்ரூபமாக உள்ளது. மங்கம்மாள் என்ற சாதாரண பெண், இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு, எப்படி ஆட்சி நுணுக்கங்களை கற்றுக் கொண்டாள் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. கணவர் இறந்ததும் உடன்கட்டை ஏற மறுத்து, மகனை அரசனாக்கி சதிகளை முறியடிப்பதை விவரிக்கும் நாவல் நுால். – சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை