/ தமிழ்மொழி / மணிமேகலை உணர்த்தும் மானுடம்

₹ 250

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் மனிதநேய கருத்துகளை விளக்கும் நுால். பசி, சிறை, மது, பரத்தமை ஒழிப்பு என்ற அறக்கருத்துகளை ஆராய்ந்து எடுத்துரைக்கிறது. மணிமேகலை ஒரு அறச்செல்வியாக காட்சி தந்து பசிப்பிணியை நீக்க பாடுபட்டதை விளக்குகிறது. அள்ளக்குறையாத அமுதசுரபி உணவு பாத்திரம் பற்றியும் உரைக்கப்பட்டுள்ளது. மணிமேகலையின் பழைய பிறவி பற்றிய விபரங்களும் உள்ளன. காமத்துக்கு ஆட்பட்டால் வாழ்வின் முடிவு துயரமாக இருக்கும் என உணர்த்துகிறது. மணிமேகலையின் அறிவுரை கேட்டு சிறைச் சாலையை அறச்சாலையாக மன்னன் மாற்றிய வரலாறும் தரப்பட்டுள்ளது. மனிதநேயத்துடன் அறப்பணி செய்வோரே சிறந்து விளங்குவர் என போற்றும் நுால். – புலவர் ரா.நாராயணன்