/ தமிழ்மொழி / மணிமேகலை

₹ 320

சமூக மறுமலர்ச்சி காப்பியமாக திகழும் பழந்தமிழ் நுால். ஆண்- – பெண் சமத்துவம், சமூக அமைப்பு, சமூக மேம்பாட்டு பணிகள், நீதி வழங்குவதில் புதுமை என மறுமலர்ச்சி கருத்துகளை எடுத்துரைக்கிறது. ஒரு பெண்ணை மட்டுமே தலைமை கதை மாந்தராகக் கொண்டுள்ளது. இம்மை, முந்தைய பிறப்புமாக அவள் வரலாற்றையே முழுமையாக விவரிக்கிறது. மணிமேகலைக்கு இணையான தலைமை மாந்தர் இதில் இடம் பெறவில்லை. கல்வித் துறையில் நுட்பமானது, கடினமானது என கருதப்படுகிற சமயக் கல்வியில் தேர்ந்த புலமை பெறுகிறாள். நுாலறிவும், அனுபவ நுண்ணறிவும் பொருந்தி, உலகில் சிறப்புடன் வாழ்வதற்கான அறநெறிகளை கற்பிக்கும் அளவு, அறிவில் பெண் உயர்வதை விளக்கும் நுால். – சிவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை