/ வாழ்க்கை வரலாறு / மணியாட்டிக்காரர் வாழ்வியல்
மணியாட்டிக்காரர் வாழ்வியல்
வித்தியாசமான உடையலங்காரத்துடன் மணியடித்து பிழைக்கும் மணியாட்டிக்காரர் குறித்த ஆய்வு நுால். கள ஆய்வு செய்து தகவல்களை திரட்டி தருகிறது.தெலுங்கை தாய்மொழியாக கொண்ட பின்தங்கிய மக்களின் சமூக பண்பாட்டு பின்புலம் சார்ந்த தகவல்கள், ஏழு தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. வரலாற்று பின்னணியை கொண்டுள்ளது. மணியாட்டிக்காரர் என்ற பெயர் வர உரிய காரணம், மக்களின் பூர்வீகம், மணியடித்து பாட்டு பாடி பிழைப்பதற்கான பின்னணி என தகவல்கள் அலசப்பட்டுள்ளன. இந்த இன மக்களின் குலத்தொழில், சடங்கு முறைகள், பழக்க வழக்கங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. இன்றைய வாழ்நிலையில் பின்தங்கியுள்ள விபரமும் திரட்டி தரப்பட்டுள்ளது. எளிய மக்களின் சமூக பின்னணியை ஆராயும் நுால்.– மதி