/ கட்டுரைகள் / மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
சைவ சமய விளக்கங்களை தொகுத்து வழங்கும் நுால். 27 தலைப்புகளில் கட்டுரைகள் அனைத்தும் சிவபெருமான் பெருமைகளை கூறுகின்றன.திருமுறைகள், சாத்திரங்கள், சங்க இலக்கியங்கள், புராணங்கள், தனிப்பாடல்கள், பெரியோர்களின் உரை விளக்கங்கள் உள்ளன. சிவன் முத்திற வடிவம், தாயுமிலி தந்தையிலி தான் தனியன், பித்தன் என்ற பெயர் உட்பட தலைப்புகளில் கட்டுரைகள் சுவை தரும்.வித்து என்பது வேறு, விதை என்பது வேறு; இரண்டும் ஒன்றல்ல என்று விளக்கும் பகுதி அருமை. பிறவிப் பெருங்கடலைக் கடக்க மரக்கலமாக விளங்குவது இறைவனின் திருவடிகளே என்ற உண்மையை விளக்கியுள்ளது. சைவ சமயத்தை பின்பற்றுவோர் படித்து இன்புறத்தக்க அருமையான நுால்.– முனைவர் கலியன் சம்பத்து