/ கல்வி / சமூக ஜனநாயகக் கையேடு
சமூக ஜனநாயகக் கையேடு
கல்வி நிறுவனங்களில் சமநீதி நடவடிக்கையை எடுத்துரைக்கும் நுால். கல்வி நிறுவன வளாகங்களில் ஜாதி வன்கொடுமைகளை களைய வேண்டியதை உறுதி செய்வது பற்றிய கருத்துகளை விழிப்புணர்வு கட்டுரைகள் வாயிலாக முன் வைக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறும் சமத்துவ சமுதாயம் பற்றிய குறிப்புகளை புரியும் வகையில் சுருங்கச் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. மாணவர், ஆசிரியர், அதிகாரி, அலுவலர் இடையே ஜாதி பாகுபாடற்ற நல்லிணக்கத்தை விளைவிக்கும் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. ஜாதியால் உயர்வு தாழ்வை ஏற்படுத்தி வாழும் சமூக அவலத்தை உணர்த்தி விழிப்பு ஏற்படுத்தும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




