/ வரலாறு / மானுடத்தின் முன்னோடி மீனவன்

₹ 200

மீனவர்களின் வரலாற்று சிறப்புகளையும், தற்போதைய நிலையையும் எடுத்துக்கூறும் நுால். பழந்தமிழ் இலக்கியங்களில் மீனவர் வாழ்வு படம் பிடிக்கப்பட்டுள்ளதை உரிய ஆதாரங்களுடன் முன்வைக்கிறது. மீனவர் வாழ்க்கை முறை குறித்து பல தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலில் உள்ள சிக்கல்களை, பாதிப்புகளை எடுத்துரைக்கிறது. இன்னல், இடர்ப்பாடுகளை தாங்கி வாழும் அவலத்தை விவரிக்கிறது. தொழில் நுட்ப ரீதியாக மீன்பிடித்தொழிலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிய தருகிறது. மீனவர்களுக்கு அரசு தரும் நலத்திட்ட விபரங்கள் அலசப்பட்டுள்ளன. இலக்கியங்களில்மீனவர் வாழ்வியல் விபரங்களை தருகிறது. மீனவர் வாழ்வில் மலர்ச்சியை தேடும் வகையிலான நுால்.– மதி


முக்கிய வீடியோ