/ கட்டுரைகள் / மறக்கமுடியுமா! தமிழ் சினிமா ஒரு பார்வை (பாகம் – 1)
மறக்கமுடியுமா! தமிழ் சினிமா ஒரு பார்வை (பாகம் – 1)
‘தினமலர்’ நாளிதழில் வெளியான போதே வரவேற்பை பெற்ற, ‘மறக்க முடியுமா!’ தொடர் புத்தகமாக வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்திய, வித்தியாசமான, வெற்றி பெற்ற படங்கள் குறித்து பேசுகிறது.கடந்த, 1941ல் சபாபதி வெளியானது முதல், சந்திரலேகா, அந்த நாள், பராசக்தி, காதலிக்க நேரமில்லை உட்பட, 100 படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக, 1 ரூபாய் மட்டுமே எம்.ஜி.ஆர்., முன்பணமாக பெற்றார். பில்லா படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்கவிருந்தவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தெய்வ மகன் படத்திற்கு முதலில் சூட்டிய பெயர், உயிரோவியம். பாக்யராஜ் ஒரே நாளில் திரைக்கதை எழுதி முடித்த படம், இன்று போய் நாளை வா. இப்படி பல சுவாரசிய தகவல்களுடன், தமிழ் சினிமா குறித்த நினைவுகளை சுவையுடன் துாண்டுகிறது.– சி.ராமநாதன்