/ கவிதைகள் / மறக்கவொண்ணா மரபுப்பாக்கள்

₹ 45

‘உள்ளத்தில் உள்ளது கவிதை, இன்ப உருவெடுப்பது கவிதை’ என்ற கவிஞரின் கூற்றுப்படி, கவிதைகள் கற்பனைக் களஞ்சியமாக, படிக்க படிக்க இன்பம் தருவதாக அமைந்துள்ளன. இலக்கண விதிமுறையில் கவிதைகள் எழுதும் கவிஞர்கள் குறைந்துள்ள இந்த நாளில், மரபுக் கவிதையை இலக்கணம் வழுவாமல், கவிதைகள் இயற்றி இருப்பது பாராட்டுக்குரியது. கவிஞர், தாம் கண்டது, கேட்டது, படித்தது, பார்த்தது, தம் கற்பனை, இவை யாவற்றையும் உள்வாங்கி, பாடல் புனைந்துள்ளார்.‘பாதகம் செய்பவர்களைக் கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா’ என, பாரதியார் பாடினார். அதே கருத்தை உள்வாங்கி ஆசிரியர், சைகை மொழி என்னும் தலைப்பில், வஞ்ச நெஞ்சம் கொண்ட ஓட்டுனரிடம், ஒரு பெண் வாய் நிறைந்திருந்த வெற்றிலைச் சாற்றை, வக்கிர மனத்துக்காரரை நோக்கிப் போய் விழுமாறு புளிச்சென துப்பினாள். புரிந்தவர் பதுங்கினார் ஓட்டுனர் அறைக்குள்ளே (பக்., 94).திருக்குறள் பாடல்கள், சில கவிதைகளுக்குத் தலைப்பாக அமைந்து உள்ளன. அணிலோடுந் தென்னை என்ற தலைப்பில் ஒரு வரி, ‘அணிலே அணிலே அழகிய அணிலே’ என, ஒரு அடி முழுவதும், ‘அ’ என்ற எழுத்து மோனையாக அமைந்திருப்பது, கவிதையை அழகு செய்கிறது. கவிதை எழுத நினைப்போர்க்கு சிறந்த வழிகாட்டி நுாலாக இந்த நுால் அமைந்திருக்கிறது. அனைவரும் படித்து கவிதை இன்பத்தில் திளைக்கலாம்.– போராசிரியர் இரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை