/ பொது / மறக்கமுடியுமா! தமிழ் சினிமா ஒரு பார்வை (பாகம் – 2)
மறக்கமுடியுமா! தமிழ் சினிமா ஒரு பார்வை (பாகம் – 2)
தமிழ் திரையுலகின் முக்கிய தருணங்களை, பாரம்பரிய திரைப்பட தாக்கங்களை வரலாற்று ரீதியாக பதிவு செய்துள்ள நுால்.மறக்க முடியாத திரைப்படங்களின் பின்னணி, தயாரிப்பு தகவல்கள், இசை, வசனங்கள், நடிகர்கள், இயக்குநர்களின் பார்வை விவரிக்கப்பட்டுள்ளது. எளிய நடையில் தகவல் நிறைந்து இருக்கிறது. தமிழ் சினிமாவின் தொன்மையை புதிய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக மலர்ந்துள்ளது. விமர்சனம், வரலாறு, தயாரிப்பு சிக்கல்கள், இயக்குநர் பார்வையுடன் அமைந்துள்ளது. சினிமாவை ரசிக்கவும், கலாசார தாக்கத்தை புரிந்து கொள்ளவும் உதவும் நுால்!– இளங்கோவன்