/ வாழ்க்கை வரலாறு / மறக்கவியலா யாழ்ப்பாணத்து மண்ணின் நினைவுகள்
மறக்கவியலா யாழ்ப்பாணத்து மண்ணின் நினைவுகள்
இலங்கை, யாழ்ப்பாண பண்பாட்டை ஆழமாக காட்டும் நுால். தாய்மொழிப்பற்று, வாழ்க்கை முறை, அறிவு மரபு, இலக்கியத் திறன், உணர்ச்சி மேலீடுகளை உணர வைக்கிறது. யாழ்ப்பாண நாட்டுப்புற பண்பாடு, இயற்கை எழில், திருவிழா கோலங்கள், வழிபாட்டு நடைமுறைகள், ஆன்மிக நோக்கு, தொழில் வளத்தை பதிவு செய்துள்ளது. கூத்து, நாடக மன்றங்கள், கைவினை தொழில்கள் பற்றி மனம் கவர சொல்கிறது. நாடகங்கள், பத்திரிகைகள், வாசக சாலைகள் வாயிலாக வளர்ச்சிக்கு பங்களித்த ஆளுமைகள் பற்றிய பதிவுகள் இடம்பெற்றுள்ளன. வேளாண், மீன் பிடித்தல், பனைத்தொழில்களை கண்முன் நிறுத்துகிறது. யாழ்ப்பாண வரலாற்று ஆவண நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு