/ ஆன்மிகம் / மரணத்தின் தன்மை சொல்வேன்

₹ 210

மண்ணுலகில் மனிதன் தன் வாழ்நாளில் கடைசியாக சந்திப்பது மரணம். ஒரு மனிதனின் மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பது கற்காலம் தொட்டு, நவீனத்தின் கம்ப்யூட்டர் காலம் வரை புரியாத புதிராகவே உள்ளது. அதற்கான பதிலைத் தேடும் உச்சகட்ட ஆன்மிகத் தேடலாக இப்புத்தகம் அமைந்துள்ளது.நுாலாசிரியரின் எழுத்து புத்தகத்தை ஒரே மூச்சில் படிக்கும் ஆர்வத்தை துாண்டுகிறது. சரித்திரம், கதைகள், வாழ்வியல், தத்துவம் என பல்வேறு விஷயங்களை படிக்கும் புத்தகப் பிரியர்களுக்கு, ‘ஒரு முடிவின் ஆரம்பம், உள்ளொளி பயணம், சொர்க்கமும், நரகமும் துவங்கி, என் கதை முடியும் நேரம்’ வரை, ஒன்பது தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள அத்தனை விஷயங்களும் வித்தியாசமானவை.அடுத்து என்ன நடக்குமோ என்ற திக்... திக்... தகவல்களுடன் ஆசிரியரின் இஷ்ட தெய்வமான ‘பச்சை புடவைக்காரி’யுடன் (மீனாட்சி) பேசிக் கொண்டே பயணிக்க வைத்திருப்பதை படிக்கும் போது, மரணத்தை அனுபவித்து பயணிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை. நிறைவாக, மரணத்தை விட வலியது அன்பு தான் என்பதையும் நுாலாசிரியர் உணர்த்தியுள்ளார்.– வியாஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை